Tamil Sangam Association of Poland Facilitates the Repatriation of Mr. Jaisingh Siluvai Adimai's Body Amid Governmental Delays
The Tamil Sangam Association of Poland (TSAP) has successfully facilitated the repatriation of the mortal remains of Mr. Jaisingh Siluvai Adimai, a Tamil Nadu native who tragically passed away in Poland due to a heart attack just 3 weeks after his arrival for work. The entire process, which involved acquiring necessary documents, raising funds, and coordinating with multiple departments, was completed with immense support from over 270+ individuals, despite facing numerous challenges and limited governmental assistance.
How the Information Reached Us
The Tamil Sangam Association of Poland was first made aware of Mr. Jaisingh’s unfortunate demise after his relatives, who had desperately tried to seek assistance from both the Tamil Nadu and Indian government bodies, contacted us. Despite their numerous efforts, the family was unable to secure the necessary support to navigate the complex international processes required to bring Mr. Jaisingh’s body back to India. Left in turmoil and facing considerable delays and obstacles, they finally reached out to TSAP for help.
The Family’s Struggles
Mr. Jaisingh’s wife, who was left in the dark about her husband’s passing for several days, along with his extended family, began reaching out to every possible contact in both India and Poland. They submitted numerous documents, including appeals to various government bodies, but were met with silence. Despite repeated attempts, even the local MLA’s intervention amounted to little more than formal letters with no concrete action.
The family, desperate for assistance, contacted multiple departments, including the Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils, hoping for some form of expedited support. However, their pleas went unanswered.
Tamil Sangam’s Immediate Response
Realizing the urgency of the situation, the Tamil Sangam Association of Poland immediately mobilized resources. Despite the complexities of international repatriation, we worked around the clock to ensure that all necessary medical documents were obtained and authenticated. We also launched a fundraising campaign that received overwhelming support from Tamils, Indians, and Poles living in Poland.
We would like to extend our sincere thanks to Mr. Jaisingh’s employer in Poland, who provided all the necessary work-related documents and supported the repatriation process.
In a remarkably short period, we secured the funds needed to cover the costs of repatriating Mr. Jaisingh’s body, including the transportation from Warsaw to Thiruvananthapuram. We finalized and signed contracts with local transportation companies and coordinated with airlines to ensure a smooth transfer. Our team, facing logistical and legal challenges, persevered to ensure that Mr. Jaisingh's body was returned to his motherland with dignity.
Challenges Faced by Tamil Sangam
Throughout this process, the Tamil Sangam Association of Poland faced significant hurdles, including delays in receiving essential documentation and a lack of response from Indian governmental bodies. Despite sending multiple status updates to the Commissionerate of Rehabilitation and Welfare of Non-Resident Tamils, we received no confirmations or assistance. Our efforts were further hampered by the absence of timely support from local officials in Tamil Nadu, who provided little more than cursory acknowledgments of the situation.
However, we would also like to extend our sincere thanks to the Indian Embassy in Poland for their prompt assistance and support in expediting the necessary formalities.
Additionally, we are still working to obtain the necessary medical documentation from the hospital to help the family with the insurance claim process. Any remaining balance of the funds raised will be handed over to Mr. Jaisingh’s wife to support her and their young daughter during this difficult time.
A Call to Action for Government Bodies
The experience of Mr. Jaisingh’s family is a stark reminder of the need for more responsive and efficient support systems for Indians living abroad. The delays and lack of action from government bodies only added to the family’s grief and suffering. As the number of Tamils from India moving to Eastern European countries, including Poland, continues to rise, it is imperative that the Ministry of External Affairs, the Government of Tamil Nadu, and the Non-Resident Welfare Board of Tamil Nadu take proactive steps to assist families in such situations promptly.
Gratitude to Our Supporters
We are immensely grateful to the 270+ individuals who contributed to this cause. Your support was instrumental in overcoming the numerous challenges we faced. Thanks to your generosity, we were able to bring Mr. Jaisingh’s body back to his family, who can now begin the process of healing.
The Tamil Sangam Association of Poland remains committed to supporting Indians living in Poland and will continue to advocate for more effective governmental responses to ensure that no family has to endure such a painful experience in the future.
திரு.ஜெயசிங்கின் பூதவுடல் தாயகம் திரும்ப ஏற்பாடு
போலந்து நாட்டிற்கு வேலைக்கு வந்து மூன்று வாரங்களே ஆன தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஜெயசிங் சிலுவை அடிமை, மாரடைப்பால் காலமானார். அன்னாரின் பூதவுடலை அவரது சொந்த ஊருக்கு பல தடைகளைத் தாண்டி, அனுப்பி வைத்திருக்கிறது போலந்து தமிழ்ச்சங்கம். பல்வேறு துறைகளைத் தொடர்பு கொண்டு, முறையான ஆவணங்களைப் பெற்று, போலந்து நாட்டில் வாழும் மக்கள் 270-க்கும் மேற்பட்டோரின் நிதியுதவி, ஆதரவோடு இப்பணியை செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது. பலமுறை முயற்சி செய்தும் அரசுகளின் உதவி, இறுதிவரை எமக்கு கிடைக்கவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம்.
போலந்து தமிழ்ச்சங்கத்திற்கு தகவல் எட்டியது எப்படி?
ஜெயசிங்கின் இறப்பு குறித்த செய்தியறிந்த அவரது உறவினர்கள், மத்திய மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு உதவி கோரியிருக்கின்றனர். அரசு தரப்பிலிருந்து எவ்வித பதிலோ உதவிகளோ கிடைக்காத பட்சத்தில், போலந்து நாட்டிலிருந்து, ஜெயசிங்கின் பூதவுடலை கொண்டு வரும் வழிமுறை தெரியாது தவித்திருக்கின்றனர். அயல்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு இறந்தவர்களின் உடலைக் கொண்டு வரும் வழிமுறை சற்றே சிக்கலானது என்பதால் பல அரசு துறைகளின் கதவுகளைத் தட்டியிருக்கிறார்கள். எக்கதவும் திறக்காத பட்சத்தில், பல்வேறு முயற்சிகளுக்குப் பின் இறுதியாக, ஜெயசிங்கின் உறவினர்கள் போலந்து தமிழ்ச்சங்கத்தின் உதவியை நாடியிருக்கின்றனர்.
ஜெயசிங்கின் குடும்பம் சந்தித்த துயரம்
ஜெயசிங்கின் இறப்பு குறித்த செய்தியறிந்த அவரது உறவினர்கள், ஜெயசிங்கின் மனைவிக்கு கணவர் இறந்த செய்தி குறித்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்தியா,போலந்து என தமக்கு தெரிந்த அனைத்து தொடர்புகளிடம் கேட்டு தகவல் தெரிந்து கொள்ள முயன்றிருக்கின்றனர். பல்வேறு அரசு துறைகளைத் தொடர்பு கொண்டு, தேவைப்படும் ஆவணங்களையும் விபரங்களையும் சமர்ப்பித்து உதவி கோரியிருக்கின்றனர்.கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரிடமும் உதவி கேட்க, மத்திய வெளியுறவுத் துறைக்கு ஒரே ஒரு மின்னஞ்சல் மட்டுமே எம்.எல்.ஏ-வால் எழுத முடிந்திருக்கிறது.
எப்படியாவது ஜெயசிங்கின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்கிற ஒரே நோக்கில், ஜெயசிங்கின் உறவினர்கள் ஏறாத படிகள் இல்லை. தமிழக அரசின் அயலகத் தமிழர் வாரியம் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் போன்ற அரசுத் துறைகளிடமும் உதவி கோரியிருக்கிறார்கள். இறுதி வரை எந்த பதிலும் இல்லை, உதவிகளும் கிடைக்கவில்லை.
போலந்து தமிழ்ச்சங்கத்தின் உதவி
அவசர தேவை கருதி போலந்து தமிழ்ச்சங்கம் உடனடியாக களத்தில் இறங்கி செயலாற்றத் தொடங்கினோம். அயல்நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு இறந்த உடலை அனுப்பும் வழிமுறை சிக்கலானது என்பதை நன்கறிந்த போலந்து தமிழ்ச்சங்கம், முதலில் முறையான மருத்துவ ஆவணங்களைப் பெற்று சரி பார்க்கும் பணியைச் செய்தோம். இறந்தவரின் உடலை பதப்படுத்தி வைப்பது, விமானத்தில் அனுப்புவது போன்றவை மிகுந்த செலவு பிடிக்கும் பணிகள் என்பதால், போலந்து நாட்டில் வாழும் தமிழ் இந்திய போலிஷ் மக்களிடையே நிதியுதவி கோரி சமூக ஊடகங்களில் அறிவிப்பு செய்தோம்.
திரு.ஜெயசிங் வேலை செய்த நிறுவனம் தக்க நேரத்தில், அவரது பணி குறித்த முறையான ஆவணங்களை எமக்கு தந்து உதவியதால், அந்நிறுவனத்திற்கு போலந்து தமிழ்ச்சங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திரு.ஜெயசிங்கின் உடலை வார்சா நகரிலிருந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லும் விமான கட்டணம், வார்சா நகரிலிருந்து வார்சா விமான நிலையத்திற்கும், பிறகு திருவனந்தபுரத்திலிருந்து ஜெயசிங்கின் சொந்த ஊரான வீயனூர் கிராமத்திற்கும் அவரது ஊடலை வாகனம் மூலம் கொண்டு செல்ல ஆகும் உள்ளூர் போக்குவரத்துச் செலவுகள் மற்ற இதர ஆவண செலவுகள் அனைத்தையும் சமாளிக்க, மிகக்குறுகிய காலத்தில் மக்களின் உதவியோடு, நிதி திரட்டி, நல்ல முறையில் திரு.ஜெயசிங்கின் பூதவுடல் அவரது வீட்டைச் சென்றடைய ஏற்பாடு செய்திருக்கின்றோம்.இங்கேயும் பல தடைகள், இடர்ப்பாடுகள் வந்த போது, விமான நிறுவனத்திடம் போலந்து தமிழ்ச்சங்கம் தொடர்பு கொண்டு பல முயற்சிகளுக்கு பிறகு இதை நிறைவேற்றியிருக்கிறது.
பல தடைகளுக்குப் பிறகு..
இப்பணியை முடிக்கும் ஒவ்வொரு சூழலிலும் எண்ணற்ற தடைகளை போலந்து தமிழ்ச்சங்கம் சந்தித்தது. தேவையான ஆவணங்களைப் பெறுவதிலும் அரசுத் துறைகளிடமிருந்து முறையான பதிலைப் பெறுவதிலும் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மறுவாழ்வுத் துறை ஆணையரகம், தமிழ்நாடு அயலகத் தமிழர் வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு தொடர்ந்து பலமுறை மின்னஞ்சல், தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றும் இறுதிவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்பதை இங்கே அழுத்தமாக பதிவு செய்து கொள்கிறோம். இந்நிலை மாற வேண்டும்.
போலந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் அமைந்திருக்கின்ற இந்தியத் தூதரகம் இப்பணியைத் துரிதப்படுத்துவதில் தக்க நேரத்தில் உதவியிருக்கிறது. அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
திரு.ஜெயசிங்கின் காப்பீடு விபரங்களுக்காக, மேலும் சில மருத்துவ ஆவணங்கள் தேவைப்படுகின்றன. அதைப் பெறுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நாம் ஏற்கெனவே மேலே குறிப்பிட்டவாறு, பொது மக்களிடம் நிதி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பும் செலவுகள் போக, எஞ்சியிருக்கும் பணம், குடும்பத்தலைவரை இழந்து வாடும் ஜெயசிங்கின் குடும்பத்திற்கே ( அவரது மனைவி, மூன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை) கையளிக்கப்படும் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.
அரசுத் துறைகளுக்கு ஒரு வேண்டுகோள்
வறிய நிலையில், போலந்து நாட்டிற்காக வேலை தேடி வந்த திரு.ஜெயசிங் உயிர் நீத்ததும், அவர் குடும்பம் இன்று கையறு நிலையில் இருக்கின்றது. குடும்பத்தலைவரை இழந்து வாடும் குடும்பத்திற்கான ஒரே ஆறுதல் இறந்த உடலையாவது மிகுந்த கண்ணியத்துடன் பெற்று, அவருக்குத் தேவையான இறுதி மரியாதைகளைச் செய்வது. இவ்விடத்தில் அரசுத்துறைகளின் உதவி மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. கையறு நிலையில்,
கண்ணீருடன் ஒவ்வொரு கதவுகளாக தட்டி உதவி கேட்கும் போது நிராகரிக்கப்படுதலும் அலைக்கழிக்கப்படுதலும் பெரும் வலியை அக்குடும்பத்திற்கு ஏற்படுத்தும். இங்கே ஜெயசிங்கின் துயரத்தை நாங்கள் பதிவு செய்வதன் காரணம், எதிர்காலத்தில் எந்த ஒரு குடும்பமும் இப்படியான சூழலைச் சந்திக்கக் கூடாது.
போலந்து உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்காகவும் கல்விக்காகவும் வரும் இந்தியர்கள், தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. இச்சூழலை கருத்தில் கொண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தமிழ்நாடு அரசு, அயலகத் தமிழர் வாரியம் சற்றே முன் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இத்தகைய சூழலை துரிதமாக எதிர்கொள்வதற்கு எமக்கு உதவினால் மிகுந்த நன்றிக்குரியவர்களாவோம். இதை கோரிக்கையாகவே அரசு துறைகளுக்கு போலந்து தமிழ்ச்சங்கத்தின் வாயிலாக முன் வைக்கிறோம். வருங்காலங்களில் இத்தகைய நெருக்கடியான சூழல்களில், மத்திய மாநில அரசுகள் எமக்கு உரிய நேரத்தில் உதவி செய்யும் எனவும் உறுதியாக நம்புகிறோம்.
எம் ஆதரவாளர்களுக்கு நன்றி!
நிதியுதவி கேட்டு அறிவிப்புச் செய்த சில நாட்களிலேயே இப்பெரும் தொகையை நாம் எட்ட முடிந்தது என்றால் நம் மக்கள் ஓடோடி வந்து செய்த உடனடி உதவியும் பேராதரவும் தான். பல்வேறு தடைகளைத் தாண்டி, இன்று ஜெயசிங்கின் குடும்பத்தினருக்கு அவரது உடலை நாம் ஒப்படைப்பதற்கு முழு முதற்காரணம் நம் மக்களின் பேருதவியே. அவர்கள் அனைவருக்கும் போலந்து தமிழ்ச்சங்கத்தின் சார்பாக மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் போலந்தில் வாழும் இந்திய மக்களின் நலனுக்காக, போலந்து தமிழ்ச்சங்கம் என்றென்றும் உடன் நிற்கும் என உறுதியளிப்பதோடு, அது நமது இந்திய மத்திய மாநில அரசுகளின் துணையோடு தான் செயல்படுத்த முடியும் என்பதையும் கோரிக்கையாக முன் வைக்கின்றோம்.